டைல்ஸ் போட போறிங்களா இதை கொஞ்சம் கவனிங்க
டைல்ஸா கிரானைட்டா?
வீட்டை கட்டி பார் திருமனத்தை நடத்தி பார் என்பார்கள் நம் முன்னோர்கள் அது என்னவோ உண்மைதான் இரண்டிலிலும் உள்ள பிரச்சனைகள் அவ்வாறு.புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு இருக்கும் பெரிய குழப்பம் வீட்டிற்கு டைல்ஸ் போடுவதா கிரானைட் போடுவதா எது சிறந்தது.?எவ்வாறு வாங்குவது?என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பவை பெரிய குழப்பமாக உள்ளது.இந்த குழப்பத்தை போக்கவே பல ஆண்டுகள் இத்தொழில் சிறந்து விளங்கும் தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த திரு.ராஜேந்திரன் அவரிடம் கேட்டோம் அவர் பகிர்ந்து கொண்ட தகவல்களும் அவரின் பரிந்துரைகளும் இக்கட்டூரையில் தொகுத்துள்ளோம்.
டைல்ஸ் போடுவது நல்லது..
டைல்ஸ் போடுவது நல்லதா டைல்ஸ் போடுவது நல்லதா என்ற கேள்விக்கு கிரானைட் பதிப்பதால் வருங்காலத்தில் மூட்டுவலி வருகிறது என்பது நிருபிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.ஆகவே all vertified tiles யை அவர் பரிந்துரைக்கிறார். ஒரு வேளை நீங்கள் கிரானைட்டை தேர்வுசெய்தால் கதுரடி 250க்கு மேல் உள்ள கிரானைட்டுகளை வாங்க வேண்டும் விலை குறைவான கிரானைட்டுகள் நாளடைவில் அதன் மேற்பரப்பில் ஆங்காங்கே பொறித்து புள்ளி போல ஏற்பட்டு விடுகிறது.அதோடு கிரானைட் சிலாப்பில் crack உள்ளதா என்பதை check செய்த பிறகு வாங்க வேண்டும்.
டைல்ஸை தேர்வு செய்யும் போது நல்ல branded tilesகளை தேர்வு செய்தால் damage and bendகளை தவிர்களாம்.
டைல்ஸ் பதிக்குமுன் கவனிக்க வேண்டியவை?
தரைதளமாக இருந்தால் தரையில் கரையான் மருந்து அடித்த பிறகு தரையில் தண்ணீரை ஊற்றி நன்றாக நனைக்க வேண்டும் பிறகு மட்டத்தை சரிபார்க வேண்டும் பின்பு சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட கலைவையை மட்டி இழுத்து சிமெண்ட் பாலை ஊற்றி டைல்ஸ்ஸை பதிக்கவும்.கண்டிப்பாக டைல்ஸ்களின் joint களில் spacer பயன்படுத்த வேண்டும்.பதிக்கப்பட்ட டைல்ஸ்கள் அனைத்தும் சரியான மட்டத்தில் உள்ளதா என்பதை சரி பார்க வேண்டும்.சரியான மட்டத்தில் இல்லையென்றால் சரியான weight வைத்து சரி செய்ய வேண்டும்.பதிக்கபட்ட டைல்ஸ் களை தட்டி சத்தம் வருகிறதா என பார்க்க வேண்டும் சத்தம் வந்தால் சரியாக படியவில்லை என்று அர்த்தம்.டைல்ஸ் பதித்த நாளன்று தண்ணீரை ஊற்றி curing விட வேண்டும்.டைல்ஸ் பதித்த ஓரிரு நாட்கள் கழித்து join களில் grout apply செய்ய வேண்டும்.first floor ல் பாத்ரூம் தரை பதிக்குமுன் waterproof liquid பயன்படுத்துவது நல்லது.wall tiles ஒட்டும் போது சிமென்ட் உடன் செரா பான்ட் கலந்து ஒட்டுவது சிறந்தது.
இக்கட்டூரை தங்களுக்கு பெரும் உதவியாக இருக்கு மென்று நம்புகிறோம் நன்றி......
தகவல்கள்-திரு.ராஜேந்திரன் (டைல்ஸ் லேயர்)தஞ்சாவூர்
செல்-+919171141374
தொகுப்பு-சிரஞ்சீவி
செல்-9344882537
Comments
Post a Comment